இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத தள்ளுபடியை இரத்து செய்யும் முடிவை திரும்பப் பெறாவிட்டால், நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று, பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய விநியோக நடவடிக்கைகளில் இருந்து சங்கம் விலகியது.
பின்னர் பணம் பெறுவதன் அடிப்படையில் வைத்தியசாலைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதற்கு தனது சங்கம் முடிவு செய்துள்ளதாக, பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனாயக்க தெரிவித்தார்.