புளூமெண்டல் ரயில் கடவை புதுப்பித்தல் பணிகளுக்காக நாளை (01) முழுமையாக மூடப்படும் என்று இலங்கை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
உருகொடவத்தையிலிருந்து துறைமுகம் வரை செல்லும் தொடருந்து வீதியில் உள்ள ப்ளூமெண்டல் தொடருந்து கடவையில் அவசர புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை பிரதான வீதி மூடப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு இலங்கை தொடருந்து திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.