பாதாள உலகக் குழுக்களின் தலைவன் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர் என்று கூறப்படும் 25 வயது இஷாரா செவ்வந்தியை கைது செய்ய 11 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
அதேவேளை ஒரு போலீஸ் குழு தேவையான நடவடிக்கைகளுக்காக துபாய் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.