பிக்மி மற்றும் ஊபர் சாரதிகள் மீது தாக்குதல்

ByEditor 2

Feb 28, 2025

இலங்கையின் சுற்றுலா பகுதிகளில் முச்சக்கர வண்டி வாடகை சேவை சாரதிகள் மீதான தாக்குதல்கள் குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக சுற்றுலா பொலிஸ் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.

‘பிக்மி’ மற்றும் ‘ஊபர்’ போன்ற முச்சக்கர வண்டி வாடகை சேவைகளின் சாரதிகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து உள்ளூர் முச்சக்கர வண்டி சாரதிகள் மீது குறிப்பாக தென் பகுதி மற்றும் கண்டியிலிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை முச்சக்கர வண்டி சேவைகள் சுற்றுலாப் பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுத்து, மீற்றர்களைக் கொண்ட உள்ளூர் முச்சக்கர வண்டிகள் சுற்றுலாப் பயணிகளிடமும் உள்ளூர் மக்களிடமும் அதிக கணட்டனத்தை வசூலிப்பதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *