பதுளை நகரில் ஐஸ் ரக போதை பொருளுடன் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (25) மாலை வேளையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய அவரை சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடமிருந்து 540 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் பசறை வீதி, சுவினீத்தகம பகுதியில் வசிப்பவர் என்பதுடன் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.