மாணவன் மீது கொடூர தாக்குதல்

ByEditor 2

Feb 27, 2025

கேகாலை பிரதேசத்தில் வீதியின் அருகே ஒரு மாணவர் ஒருவரை மண்டியிட வைத்து தாக்கும் காணொளி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கேகாலை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் 16 வயதுடைய மூன்று சந்தேகநபர்கள் (26) கைது செய்யப்பட்டனர்.

வீதியில் மண்டியிட வைத்து மாணவன் மீது கொடூர தாக்குதல்; நடந்தது என்ன? | Police Take Action After Brutal Attack On Student

மூவர் கைது இருவர் தலைமறைவு

கடந்த 20 ஆம் திகதி கேகாலை, பிடிஹும பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த தமுனுபொலவைச் சேர்ந்த மாணவர் மீது இந்த கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் ஐந்து பேர் கொண்ட குழு ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் ஏனைய இரண்டு சந்தேகநபர்களைக் கண்டுபிடிப்பதற்கான பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற்து.

அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாளை (27) கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். அதேவேளை மாணவன் மீது தாக்க்குதல் நடத்தப்பட்டமைக்கான காரணம் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *