காப்பாற்றப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள்

ByEditor 2

Feb 25, 2025

காலி – ஹிக்கடுவை கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மூன்று வெளிநாட்டுப் பிரஜைகள் ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 39 வயதுடைய நபரும், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணும் 46 வயதுடைய நபருமே காப்பாற்றப்பட்டுள்ளனர்.

காப்பாற்றப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் மூவர் | 3 Foreign Nationals Rescued Hikkaduwa Sea

நேற்றைய தினம் ஹிக்கடுவை கடலில் மூவரும் நீராடிக் கொண்டிருந்துள்ள நிலையில் திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.

இதனை அவதானித்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர்கள், உடனடியாக செயல்பட்டு மூன்று வெளிநாட்டுப் பிரஜைகளையும் காப்பாற்றி அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *