முதலை தாக்கி படுகாயமடைந்த மாணவன்

ByEditor 2

Feb 25, 2025

மீ ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று (24) மாலை முதலை தாக்கி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

10 வயதுடைய பாடசாலை மாணவரே  இவ்வாறு காயமடைந்துள்ளார்.

முதலை தாக்கி படுகாயமடைந்த பாடசாலை மாணவன் | Schoolboy Seriously Injured In Crocodile Attack

இந்த பாடசாலை மாணவன் நேற்றைய தினம் மாலை மீ ஓயாவில் நீராடிக்கொண்டிருக்கும் போது, அங்கிருந்த முதலை ஒன்று மாணவனை தாக்கி நீரினுள் இழுத்துச் செல்ல முயன்றுள்ளது.

இதன்போது, பிரதேசவாசிகள் சிலர் இணைந்து பாடசாலை மாணவனை காப்பாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த பாடசாலை மாணவன் பொல்பித்திகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *