விமான நிலையத்தில் சிக்கிய இந்திய பிரஜை

ByEditor 2

Feb 24, 2025

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (24) விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 73 வயதுடைய சந்தேக நபரான இந்திய பிரஜை தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து இன்றைய தினம் பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

விசாரணை

இதன்போது, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்ல் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது,  சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 908 கிராம் குஷ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இந்திய பிரஜை | Indian National Arrested In Katunayake

மேலும், இது தொடர்பில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *