மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம்

ByEditor 2

Feb 24, 2025

தற்போதைய வறண்ட வானிலை நிலைமைகள் நீடித்தால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி (Kumara Jayakodi) தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பொறியியலாளர்களின் சந்திப்பில் நேற்று (23) பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  “மின்சாரக் கட்டணங்களை 20% குறைத்தோம். ஆனால், வறட்சி இப்படியே சென்றால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

வறட்சி

மின்சார சபை எப்போதும் 140 பில்லியன் ரூபாய் இலாபம் என்று கூறுகிறது. எப்போதும் அந்த பொய்யைச் சொல்கிறார்கள். மின்சார சபைக்கு இலாபம் இல்லை, ஒவ்வொரு காலாண்டிலும் விலை மாறும்போது ஒரு மீதி வருகிறது.

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம்:அமைச்சர் வெளியிட்ட தகவல் | Dry Weather Risks Increasing Electricity Bills

முந்தைய 6 மாதங்களின் மீதியை அடுத்த 6 மாதங்களுக்கு எடுத்துக்கொள்கிறோம். அதன் மூலம்தான் ஒரு முன்னறிவிப்பு செய்யப்படுகிறது.

அந்த முன்னறிவிப்பைச் சொல்லும்போது, மீதமுள்ள தொகையை செலவு செய்த பின்னரே எடுக்கிறோம். அதனால் ஆண்டு முடிவில் இலாபம் எதுவும் மீதியாக இருப்பதில்லை.

கடந்த ஆண்டு 140 பில்லியன் இருந்தது, அது செலவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் 46 பில்லியன் மட்டுமே மீதியாக இதற்கு வந்தது. அந்த 46 பில்லியனை இதில் சேர்த்தால், இந்த 6 மாதங்களில் 42 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுகிறது. இந்த வறட்சி அதிகரித்தால் அது மேலும் அதிகரிக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *