முதலில் செல்பி, பிறகு கொலை

ByEditor 2

Feb 21, 2025

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் சந்தேக நபரான பெண்ணும் ஒன்றாக உள்ள புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

மஹரகம தம்பஹேன வீதியைச் சேர்ந்த சமிந்து டில்ஷான் பியுமங்க கந்தானராச்சியும், நீர்கொழும்பைச் சேர்ந்த பிங்புர தேவகே இஷாரா செவ்வந்தியும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படமே முதல் தடவையாக வெளியாகியுள்ளது.

புதுக்கடை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் கணேமுல்ல சஞ்சீவ என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக பொரளையில் உள்ள ஒரு தனியார் மலர் சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உடலுக்கான இறுதிச் சடங்கு ஏற்பாடுகள்குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் உடலை அடக்கம் செய்யுமாறு நேற்று கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.

உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து, அவரது தாயாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

விசாரணையைத் தொடர்ந்து, அவரது உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச் சடங்குகளுக்காக பொரளையில் உள்ள ஒரு தனியார் மலர் சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *