கொழும்பு – மட்டக்களப்பு தொடருந்து சேவை வழமைக்கு

ByEditor 2

Feb 21, 2025

யானைகள் மோதியதால் தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருந்த கொழும்பு – மட்டக்களப்பு மார்க்கம் ஊடான தொடருந்து சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா தொடருந்து மோதி 6 காட்டு யானைகள் உயிரிழந்தன.

இந்த விபத்து கல்ஓயா தொடருந்து நிலையத்துக்கு அருகே நேற்று இரவு 11.20 அளவில் இடம்பெற்றது.

தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருந்த கொழும்பு - மட்டக்களப்பு தொடருந்து சேவை வழமைக்கு | Colombo Batticaloa Train Service Disrupted

இதன் காரணமாக குறித்த தொடருந்தின் இயந்திரம் தடம்புரண்டதுடன் மட்டக்களப்பு – கொழும்பு தொடருந்து மார்க்கத்தின் ஊடான சேவை பாதிப்படைந்திருந்தது.

இந்த நிலையில், தடம்புரண்டுள்ள தொடருந்தை மீள் தடமேற்றும் பணிகள் நிறைடைந்துள்ளன.

இந்தநிலையில், கொழும்பு – மட்டக்களப்பு மார்க்கம் ஊடான தொடருந்து சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *