8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானில் இன்று தொடங்கியுள்ளது.
கராச்சி மைதானத்தில் நடைபெற்றுவரும் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வில் யங் மற்றும் டெவான் கான்வே களமிறங்கினர். நிலைத்து நின்று ஆடிய ஆடிய வில் யங்(107), சதம் விளாசி அசத்தினார்.
இறுதியாக நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் ரன்கள் குவித்தது.
321 இன்று வெற்றி இலக்கை நோக்கிய பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 260 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.