சுங்கத் திணைக்களத்தின் எச்சரிக்கை

ByEditor 2

Feb 19, 2025

மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை சுங்கத் திணைக்களம் பொது மக்களை எச்சரித்துள்ளது.

சுங்கத் தலைவர் ஜெனரலின் பெயர் மற்றும் பதவியை பயன்படுத்தி, பல்வேறு நபர்களிடமிருந்து வாட்ஸ்அப் செய்திகள் மூலம் பணம் கோரும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி குறித்து இலங்கை சுங்கத் திணைக்களத்திற்குத் தகவல் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் கோரிக்கை

இந்த மோசடி வாட்ஸ்அப் எண்ணைப் பயன்படுத்தி, வங்கிக் கணக்கு எண்களையும் குறிப்பிட்டு, பல்வேறு காரணங்களைக் கூறி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த மோசடி நபர்களின் நடவடிக்கைகளுக்கு இரையாக வேண்டாம் என சுங்கத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

அத்தகைய கோரிக்கை பெறப்பட்டால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தெரிவிக்குமாறும் சுங்கத் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *