திருமண நாளில் உயிரிழந்த மணமகன்

ByEditor 2

Feb 17, 2025

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் மணமகன் , தனது திருமண நாளன்றே திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமண ஊர்வலத்தின் போது 26 வயதான மணமகன் குதிரையின் மீதிருந்து சரிந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவ பரிசோதனை

அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், மணமகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பாரம்பரிய உடையில் அலங்கரிக்கப்பட்ட மணமகன் குதிரையின் மீது இருந்து தடுமாறி கீழே விழும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *