திருமணம் முடித்து 3 பிள்ளைகளுக்கு தாயான பிறகும்

ByEditor 2

Feb 17, 2025

திருமணம் முடித்து மூன்று பிள்ளைகளுக்கு தாயான பிறகும் மேலும் படித்து சாதிக்கலாம் என்பதை சமூகத்திற்கு உணர்த்தியுள்ளார் கர்நாடக மாநிலம் உடுப்பியில் குண்டல்பேட் சேர்ந்த I.M.Farhana.

ஆறு வருடங்கள் முன்பு இர்ஃபான் இவரை திருமணம் செய்யும் போது ஃபர்ஹானா பி.டெக் பொறியியல் பட்டதாரி.. மூன்று குழந்தைகள் பிறந்த பின்பும் தனது மனைவியின் மேற்படிப்பு ஆர்வம் குறையவில்லை என்பதை உணர்ந்தவர் மங்களூர் விஷ்வேஷ்வரய்யா டெக்னிக்கல் யூனிவர்சிட்டியில் சேர்த்து படிக்க வைத்ததில்  M.Tech  Computer Science And Engineering பாடப்பிரிவில் பல்கலை அளவில் 2வது ரேங்குடன் தேர்ச்சி பெற்றுள்ளார்…

தனது எம்.டெக் சாதனை குறித்து ஃபர்ஹானா கூறுகையில்,,

எனது முயற்சி என்னைப் போன்று மேலும் படிக்க வேண்டும் எனும் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் தூண்டுகோலாகவும் இருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *