சமூக ஊடகங்களில் வேகமாக, பரவி வரும் பதிவு

ByEditor 2

Feb 17, 2025

புரோமோஷனுக்காக தினமும் 14 மணிநேரம் பணி செய்து ரூ.7 கோடி சம்பளத்துடன் சீனியர் மேனேஜர் பதவியை பெற்ற ஊழியருக்கு அவரது மனைவியால் கனவிலும் நடக்க கூடாத சம்பவம் நடந்துள்ளது.

இதனால் தற்போது அந்த ஊழியர் மனம் உடைந்து வலைதளத்தில் பதிவிட்ட போஸ்ட் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. இப்போது நம்மில் பலரும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். இதனை சாதகமாக்கி பல நிறுவனங்கள் நம்மிடம் 8 மணிநேரத்துக்கு மேலாக கூடுதலாக பணி செய்ய வைத்து விடுகின்றன.

நாமும் சம்பளம் வருகிறதே என்று நேரம், காலம் பாராமல் வேலை செய்வதை வாடிக்கையாக்கி வருகிறோம். இப்படியான சூழலில் தான் நம் உறவுகளை இழந்து விடுகிறோம். வீட்டில் இருக்கும் கணவர், மனைவி, குழந்தைகள், பெற்றோருடன் நேரம் செலவிட முடியாத நிலைக்கு பலரும் தள்ளப்பட்டு வருகின்றனர். இது நமக்கு மட்டுமின்றி நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மனஅழுத்தத்தை கொடுத்து விடும்.

அதோடு குழந்தைகள் இருப்பின் நம் அப்பா, அம்மா நம்முடன் கொஞ்ச நேரம் பேச மாட்டார்களா? பூங்கா, சினிமா, ஹோட்டலுக்கு அழைத்து செல்ல மாட்டார்களா? என்று ஏங்கிவிடும். இதனை நம்மில் பலரும் அனுபவித்து இருக்கலாம். ஆனாலும் கூட வாழ்க்கைக்கு பிரதான தேவையாக உள்ள பணத்தை சம்பாதிக்க குடும்பத்துக்கான நேரம் செலவிடுவதை குறைத்து கொண்டு பணியில் கவனம் செலுத்துவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

இந்நிலையில் தான் பதவி உயர்வுக்காக தினமும் 14 மணிநேரம் வேலை செய்த ஊழியர் ரூ.7 கோடி சம்பளத்துடன் சீனியர் மேனேஜர் பதவியை எட்டிப்பிடித்தபோது அவரது மனைவி சொன்ன வார்த்தை அவருக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதாவது Blind வலைதளத்தில் தற்போது ஒருவர் பதவி உயர்வுக்காக மனைவி, குழந்தையை பாராமல் தினமும் 14 மணிநேரம் பணி செய்ததன் பின்விளைவு பற்றிய உருக்கமாக பதிவு ஒன்றை செய்துள்ளார்.

இந்த நபர் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதுபற்றி அவர்,

‛‛தனியார் நிறுவனத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பாக சீனியராக சேர்ந்ததேன். பதவி உயர்விற்காக பணி செய்தேன். தினமும் 14 மணிநேரம் பணி செய்தேன். ஐரோப்பா மற்றும் ஆசியா டீம்களை ஒருங்கிணைக்கும் வகையில் தினமும் மீட்டிங் இருக்கும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 14 மணிநேரம் மீட்டிங்கில் இருப்பேன்.

எனது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போதும் நான் அவர் அருகே இல்லை. அதன்பிறகு குழந்தை பிறந்த பிறகும் அவருடன் நேரம் செலவிடவில்லை. இப்போது நான் ரூ.7.8 கோடி சம்பளத்தில் சீனியர் மேனேஜராக பதவி உயர்வு பெற்றுவிட்டேன். ஆனால் என் மனைவி என்னிடம் விவாகரத்து கேட்டுள்ளார். இதனால் மனம் உடைந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

இந்த பதிவு தற்போது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். குடும்பத்தை மொத்தமாக ஒதுக்கிவிட்டு பணி செய்வது தவறு. இவரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பலரும் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தங்களின் நிறுவனத்தில் உள்ள ‛வொர்க் லைஃப்’ பேலன்ஸ் பற்றிய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *