பண்டாரகம வாகன விபத்து: கடற்படை உறுப்பினர் ஒருவர் உயிரிழப்பு

ByEditor 2

Feb 16, 2025

பண்டாரகம, கம்மன்பில குளத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் பண்டாரகம, அந்துன்வென்ன பகுதியைச் சேர்ந்த 26 வயதான கடற்படை உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து சம்பவம் 

உயிரிழந்த இளைஞன் பண்டாரகம, வேவிட்ட பகுதியில் உள்ள தனது காதலியின் வீட்டில் இருந்து வீடு திரும்பும்  அவர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி, ஒரு மின்சார தூணுடன் மோதி, சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

அந்த நேரத்தில், வீதியில் பயணித்த பல வாகனங்களின் சாரதிகள் விபத்து நடப்பதைக் கண்டு, பிரதேசவாசிகளுக்கு தகவல் தெரிவித்து, காரில் சிக்கிய இளைஞனை மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதும் அவர்  முன்னரே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் காருக்கும், உயர் மின்னழுத்த மின் தூணுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்தைத் தொடர்ந்து, பண்டாரகமவில் பல பகுதிகளுக்கு மின்சாரம் தடைப்பட்டதுடன், மின்சார சபை ஊழியர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் அதை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்தனர். 

 சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதினால் இந்த  விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *