4750 கிலோகிராம் அரிசி பறிமுதல்

ByEditor 2

Feb 16, 2025

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கிட்டத்தட்ட 4750 கிலோகிராம் கீரி சம்பாவை மறைத்து வைத்திருந்த விற்பனையாளரை நுகர்வோர் விவகார அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது.

கொழும்பு 12 இல் உள்ள ஒரு கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிசித் தொகை, நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் (15) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4750 கிலோகிராம் அரிசி பறிமுதல் | 4750 Kilograms Of Hoarded Rice Seized

மேற்கு மாகாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த அரிசி மற்றும் பொருட்களை மறைத்து வைத்த தொழிலதிபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *