சிசேரியன் செய்த பெண்களுக்கு அதிகமாக இடுப்பு வலி ஏற்படுவது ஏன்?

ByEditor 2

Feb 12, 2025

அறுவை சிகிச்சைக்கு பின்பு பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்படுவதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

அறுவை சிகிச்சைக்கு பின்பு இடுப்பு வலி

அறுவை சிகிச்சைக்கு பின்பு பெண்களுக்கு சில உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் அறுவை சிகிச்சைக்கு பின்பு 5 முதல் 10 ஆண்டுகள் கழித்து இடுப்பு வலி ஏற்படும்.

மேலும் இதன் காரணமாக இடுப்பு எலும்பு மற்றும் குருத்தெலும்புகளில் தேய்மானமும் ஏற்படும். அதிக உடல்எடை, கடுமையான உடல் உழைப்பு, வயதுக்கு அதிகமான உடற்பயிற்சி இவையும் இடுப்பு வலிக்கு காரணமாக இருக்கும்.

கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிப்பது இயல்பானது. ஆனால் இந்த எடை அதிகரிப்பால் உடலின் தோற்ற அமைப்பு மாறி, முதுகு பகுதி பின்புறம் வளைந்து, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் பலவீனமடைகின்றன.

சிசேரியன் செய்த பெண்களுக்கு அதிகமாக இடுப்பு வலி ஏற்படுவது ஏன்? | Sijeriyan Delivery Woman Hip Pain

இதனால், இடுப்பு எலும்பு மற்றும் குருத்தெலும்பு அதிக அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. இதனால், உடலின் பின்புற தசைகள் மற்றும் எலும்பு இணைப்புகள் அதிக பாரத்தை சந்திக்க நேரிடுகிறது.

பல மாதங்கள் தொடர்ந்து அதிக பாரத்தை சுமக்கும் நிலையிலேயே, சில பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு இடுப்பு வலி தோன்றும்.

சிலருக்கு இது ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும், ஆனால் சிலருக்கு இது வருடங்கள் நீடிக்கலாம்.

மேலும் சில காரணங்கள்

மேலும் இடுப்பு வலி ஏற்படுவதற்கு காரணங்கள் என்னவெனில், இடுப்பு தசை பிடிப்பு, தசை பிறழ்வு, ஜவ்வு இறுக்கம், குருத்தெலும்பு முறைகேடு, கீழ் வாதம், எலும்பு வலுவிழந்து போவது, முதுகெலும்பில் வீக்கம், விபத்து, அதிக உடல் சதைப்பிடிப்பு, இடுப்பு தசைகள் நீளுதல் மற்றும் கிழிதல் போன்ற பிரச்சனைகள் இடுப்புவலியை ஏற்படுத்தும்.

சிசேரியன் செய்த பெண்களுக்கு அதிகமாக இடுப்பு வலி ஏற்படுவது ஏன்? | Sijeriyan Delivery Woman Hip Pain

இடுப்பு வலியை கட்டுப்படுத்துவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில விடயங்களை மேற்கொள்ளலாம். அதிக எடை தூக்குவதை தவிர்க்க வேண்டும்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல், அடிக்கடி எழுப்பு நடப்பது அவசியமாகும்.

முறையாக நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வது. உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது.

இடுப்பு வலி நீங்க, மருத்துவர் மற்றும் பிசியோதெரபி நிபுணர்களின் ஆலோசனை பெறுவது, அவர்கள் பரிந்துரைக்கும் மருத்துவம் மற்றும் உடல் இயக்க பயிற்சிகளை செய்வது மிகவும் பயனளிக்கும்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *