கொழுப்பு கல்லீரல் நோய்

ByEditor 2

Feb 11, 2025

கொழுப்பு கல்லீரல் என்பது கல்லீரலில் சில கொழுப்புகள் சேரும் ஒரு பொதுவான நிலை. கல்லீரலில் உள்ள கொழுப்பின் சதவீதம் கல்லீரலின் மொத்த எடையில் 5 முதல் 10 சதவீதம் அதிகமாக இருந்தால், அது கொழுப்பு கல்லீரல் நோய் எனப்படும்.

சில சந்தர்ப்பங்களில், கொழுப்பு கல்லீரல் உயிருக்கு ஆபத்தானது. கொழுப்பு கல்லீரல் எந்த வயதினருக்கும் பாலினத்தவருக்கும் வரும். இருப்பினும் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு கொழுப்பு கல்லீரல் அதிகமாகக் காணப்படுகிறது.

இது தவிர, அதிகமாக மது அருந்துபவர்களுக்கும், அதிகமாக சாப்பிடுபவர்களுக்கும் கொழுப்பு கல்லீரல் உருவாகும் அபாயம் அதிகம். இந்த நோய் ஆரம்பத்தில் பெரிதளவில் அறிகுறிகள் காட்டாது.

கொழுப்பு கல்லீரல் நோயால் பெண்களுக்கு காட்டும் தீவிரமான அறிகுறிகள் என்ன? | Fatty Liver Symptoms In Females Body Health

ஆனால் பிரச்சனை அதிகரிக்கத் தொடங்கும் போது இது மோசமான அறிகுறிகளை காட்டும். அந்த வகையில் இந்த பதிவில் கொழுப்பு கல்லீரலால் பெண்களுக்கு என்னென்ன அறிகுறிகள் காட்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கொழுப்பு கல்லீரல் நோய்

ஒழுங்கற்ற மாதவிடாய் பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் என்பது கொழுப்பு கல்லீரல் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.  ஹார்மோன் சமநிலையின்மை கொழுப்பு கல்லீரல் காரணமாக ஏற்படுகிறது.

இதன் காரணமாக மாதவிடாய் ஒழுங்கற்றதாகிறது. உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இருந்தால், இந்த அறிகுறியை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். இது மட்டுமல்லாமல், கொழுப்பு கல்லீரல் மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கையும் ஏற்படுத்தும்.

கொழுப்பு கல்லீரல் நோயால் பெண்களுக்கு காட்டும் தீவிரமான அறிகுறிகள் என்ன? | Fatty Liver Symptoms In Females Body Health

நெஞ்செரிச்சல் கொழுப்பு கல்லீரல் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அஜீரணம், நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்று எரிச்சல் ஆகியவை கொழுப்பு கல்லீரலின் பொதுவான அறிகுறிகளாகும்.

நீங்கள் அடிக்கடி மார்பு மற்றும் வயிற்றில் எரியும் உணர்வை அனுபவித்தால், இந்த அறிகுறியை புறக்கணிக்காதீர்கள். இது அஜீரணம், வாயு, அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கலையும் ஏற்படுத்தும்.

கொழுப்பு கல்லீரல் நோயால் பெண்களுக்கு காட்டும் தீவிரமான அறிகுறிகள் என்ன? | Fatty Liver Symptoms In Females Body Health

தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல் தோல் அல்லது கண்களில் மஞ்சள் நிறம் தெரிந்தால், இந்த அறிகுறியை இதை சாதாரணமாக விட கூடாது.

தோல் அல்லது கண்கள் மஞ்சள் நிறமாக மாறுவது கொழுப்பு கல்லீரல் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இதனால் கல்லீரல் சரியாக செயல்பட முடியாது. பிலிரூபின் அளவு அதிகமாவதால் தோல் மஞ்சள் நிறமாக மாறும். 

கொழுப்பு கல்லீரல் நோயால் பெண்களுக்கு காட்டும் தீவிரமான அறிகுறிகள் என்ன? | Fatty Liver Symptoms In Females Body Health

 பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் பெண்களுக்கு கொழுப்பு கல்லீரல் இருந்தால் அவர்களின் கால்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் ஏற்படலாம்.

பொதுவாக கல்லீரலில் கொழுப்பு சேர்வதால், பாதங்களில் வீக்கம் ஏற்படத் தொடங்குகிறது. கொழுப்பு கல்லீரல் காரணமாக, கால்களில் திரவம் தேங்கத் தொடங்கி, வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

உங்கள் கால்களில் வீக்கம் ஏற்பட்டால், கொழுப்பு கல்லீரலை ஒரு முறை பரிசோதனை செய்வது சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *