கொழும்பு, 09 பிப்ரவரி 2025:
சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் ஏற்பாட்டில் இயக்குநர்கள் குழு விருதுகள் வழங்கும் விழா மற்றும் புதிய உறுப்பினர்கள் அழைப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழா, செரண்டிப் கிராண்ட், கொழும்பு 10 இல் சிறப்பாக நடைபெற்றது, இதில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவுக்கு சிறப்பு சேர்த்தனர்.
நிகழ்வின் முக்கிய அம்சமாக, இயக்குநர்கள் குழுவினருக்கு விருதுகள் வழங்கப்பட்டதுடன், புதிய உறுப்பினர்களை அனுமதிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. மேலும், அமைப்பின் எதிர்கால திட்டங்கள் குறித்து முக்கியமான கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டன.
சமூகநலத்திற்காக தொடர்ந்து செயல்படுமாறு உறுதியளித்த இந்த அமைப்பு, எதிர்காலத்திலும் மனித உரிமைகளை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தது.
இந்த நிகழ்வு சமூகநலத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைவருக்கும் ஒரு முக்கியமான தளமாக அமைந்துள்ளது.


