சிலிண்டர் வெடித்து இருவர் மருத்துவமனையில்

ByEditor 2

Feb 11, 2025

கதிர்காமம் கடற்படை விடுதியில் தங்கியிருந்த இருவர் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த எரிவாயு சிலிண்டர் இன்று  (11) காலை 8.30 மணியளவில் வெடித்துள்ளது.

மாத்தறை, கெக்கனதுர பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணும் 36 வயதுடைய ஆணும் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்தனர். காலை உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது எரிவாயு சிலிண்டர் வெடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து இருவர் மருத்துவமனையில் | Two Hospitalized Cooking Gas Cylinder Explode

காயமடைந்தவர்கள் கதிர்காமம் பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திஸ்ஸமஹாராம மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *