அமைதியாகவே எந்த காரியத்தையும் சாதிக்கலாம்! 

ByEditor 2

Feb 11, 2025

பொதுவாகவே வாழ்வில் பெரும்பாலானவர்களுக்கு இலக்கு நிச்சயம். ஆனால் லட்சியவாதிகளாக இருக்கும் அனைருமே வெற்றியாளர்களாக, சாதனையாளர்களாக மாறிவிடுவது கிடையாது.

இதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா? வெற்றியடை வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டும் போதாது அதற்கு முக்கியமாக சில பழக்கங்கள் இருக்க வேண்டும்.

வெற்றியின் ரகசியம்: அமைதியாகவே எந்த காரியத்தையும் சாதிக்கலாம்! எப்படின்னு தெரியுமா? | Why Is Staying Quiet The Secret To Success

சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து திரட்டப்பட்ட சில குறிப்புகளின் பிரகாரம் வாழ்வில் விரைவில் இலக்கை அடைய வேண்டும் என்றால் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.

நாம் ஒரு விடயம் நடக்க வேண்டும் என நினைத்தவுடனேயே அதனை யாரிடமாவது பகிர்நதுக்கொள்ள நினைக்கின்றோம். ஆனால் இது இந்த பழக்கம்  வெற்றியை உங்கள் பக்கத்தில் நெருங்கவே விடாது என சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறில் இருந்து அறிய முடிகின்றது.

வெற்றியின் ரகசியம்: அமைதியாகவே எந்த காரியத்தையும் சாதிக்கலாம்! எப்படின்னு தெரியுமா? | Why Is Staying Quiet The Secret To Success

அமைதியாக இருந்து வாழ்வில் நினைத்த அனைத்து விடயங்களையும் சாதிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

வெற்றிக்கான ரகசிய பழக்கங்கள்

நீங்கள் ஒரு இலக்கை கொண்டிருக்கின்றீர்கள் என்றால், அது நிறைவேறும் வரையில் யாரிடமும் பகிராதீர்கள். அதற்கு  பதிலாக நீங்கள் தனிப்பட்ட ரீதியில் அதனை ஒரு ஒரு நோட்டு புத்தகத்தில் அதை எழுதி வைக்கலாம்.

வெற்றியின் ரகசியம்: அமைதியாகவே எந்த காரியத்தையும் சாதிக்கலாம்! எப்படின்னு தெரியுமா? | Why Is Staying Quiet The Secret To Success

இதனால் மற்றவர்களின் பல்வேறு கருத்துக்களில் இருந்து தப்பிக்கலாம். இல்லாவில் நீங்கள் உங்கள் இலக்கை பகிரும் ஒவ்வொரு நபரும் அவர்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துக்களை கூறி உங்களை திசைத்திருப்ப நேரிடும்.

உங்களின் இலக்கை அடைய நீங்கள் எடுக்கும் முயற்ச்சிகளில் ஏற்படும் சின்ன சின்ன வெற்றிகள் அல்லது சின்ன சின்ன தோல்விகள் என அனைத்தையும் எழுதி வைப்பதால் எமு செய்தால் வெற்றி என்பது எது செய்தால் தோல்வி ஏற்படும் என்பதும் உங்களுக்கு தெளிவாக புரைிந்துவிடும்.

வெற்றியின் ரகசியம்: அமைதியாகவே எந்த காரியத்தையும் சாதிக்கலாம்! எப்படின்னு தெரியுமா? | Why Is Staying Quiet The Secret To Success

இதை செய்யப் போகிறேன் அதை செய்யப் போகிறேன் என மற்றவர்களிடம் சொல்லுவதை நிறுத்திவிட்டு செய்யவேண்டியதை செய்தே காட்டிவிடுங்கள். உண்மையில் செயல்கள் தான் பேச வேண்டும் அதில் தான் வெற்றி ஒழிந்திருக்கின்றது.

நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என ஆசைப்படுகின்றீர்கள் என்றால் அதற்கான முயற்சியை யாருக்கும் சொல்லாதீர்கள் இறுதியில் உங்களின் மாற்றம் மற்றவர்களுக்கு நீங்கள் என்ன செய்திருக்கின்றீர்கள் என்பதை உணர்த்திவிடும்.

வெற்றியின் ரகசியம்: அமைதியாகவே எந்த காரியத்தையும் சாதிக்கலாம்! எப்படின்னு தெரியுமா? | Why Is Staying Quiet The Secret To Success

உங்கள் இலக்கில் இருந்து பின்வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் எழும் போதெல்லாம் உங்களின் வெற்றியை தனியாக இருந்து கற்பனை செய்து பாருங்கள். அதனை தொடர்ந்து செய்வதால் உங்களுக்குள் பிறக்கும் ஆற்றலுக்கு நிகராக யாரைாலும் அறிவுரை கூற முடியாது. அது மிகப்பெரும் பலத்தை கொடுக்கும்.

வெற்றியின் ரகசியம்: அமைதியாகவே எந்த காரியத்தையும் சாதிக்கலாம்! எப்படின்னு தெரியுமா? | Why Is Staying Quiet The Secret To Success

குறிப்பாக உங்களின் திறமையை குறைத்து மதிப்பிடுபவர்களிடமும் உங்களை மட்டந்தட்டுபவர்களிடமும் நீங்கள் நிச்சயம் வெற்றிப்பெருவீர்கள் என்பதை சொற்களால் புரியவைக்க ஒரு போதும் முயற்சி செய்யாதீர்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *