மெக்சிகோவின் தெற்கே உள்ள மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பேருந்து நெடுஞ்சாலை பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 51 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிர் பிழைத்தவர்கள் பள்ளத்தாக்கில் சிக்கிக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரிய பள்ளத்தாக்கு
சான் அகஸ்டின் அகாசாகஸ்ட்லான் நகரத்திலிருந்து தலைநகருக்குள் சென்ற பேருந்து, நகரத்திற்குள் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, சுமார் 20 மீற்றர் ஆழமான கழிவுகள் அடங்கிய பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களில் 36 ஆண்களின் சடலங்களும் 15 பெண்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் தீயணைப்புத் துறையினரால் பகிரப்பட்ட படங்களில், பேருந்து பகுதியளவு கழிவுநீரில் மூழ்கி, பாதிக்கப்பட்டவர்களின் உடல்களால் சூழப்பட்டிருப்பமை காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், குவாத்தமாலாவின் ஜனாதிபதி பெர்னார்டோ அரேவலோ மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்து, மீட்புப் பணிகளுக்கு உதவ நாட்டின் இராணுவத்தையும் பேரிடர் நிறுவனத்தையும் அனுப்பியுள்ளார்.