உன் வருமானம் எப்போதும் தடைப்படலாம்!
நீ நல்ல தொழிலில், பெருத்த சம்பளத்திற்கு வேலை பார்க்கும் போது கோழிக் கறி சாப்பிடலாம்.
சம்பளம் குறையும் போது கோழி முட்டை மாத்திரமே சாப்பிட முடியுமாகும்.
தொழிலை இழக்க நேரிட்டால் கோழி போல கோழித் தீன்களை (கோதுமை, தானியம்) மாத்திரமே சாப்பிட முடியுமாகும்.
இப்படியே தொடர்ந்தால் காலப்போக்கில் கோழிகள் போல உணவைத் தோடித் தேடி சுற்றித் திரிய வேண்டிவரும்.
உன் சம்பளம், உன் வருமானம் அதுவே உன் மூலதனம். சிலதை உண்டுவிட்டு சிலதை முதலீடு செய்வதானது உன் அனைத்து பொருளாதார பிரச்சினைகளுக்கும் உத்தரவாதம் அளிக்கும்.
சிறந்த முதலீடு செய்வதானது நீ என்றும் கேழிக் கறி உண்ண உனக்கு வழிவகுக்கும்.
ஏனெனில் உன் வருமானம் எப்போதும் தடைப்படலாம்! தொழில் வாய்ப்பை நீ எப்போதும் இழக்கலாம்.!
உடல் பலத்தை நீ எப்போதும் இழக்கலாம்!
பலசாளியாக, தொழிலாளியாக என்றும் யாரும் இருக்க மாட்டார்கள். அப்போது உன் சமயோசித முதலீடு உனக்குக் கைகொடுக்கும்.