ஏழைகளின் ஆப்பிள் என்று கூறப்படும் பேரிக்காயை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அதிகமான நார்ச்சத்துக்கள் அடங்கிய பேரிக்காயில் பல வைட்டமின்கள் உள்ளது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்தினை இன்னும் மேம்படுத்தலாம்.

ஒரு பேரிக்காயில் 6 கிராம் நார்ச்சத்து இருப்பதாகவும், ஒரு பெண்ணுக்கு தேவைப்படும் சராசரி நார்ச்சத்து அளவில் 24 சதவீதம் ஒரு பேரிக்காய் சாப்பிடுவதன் மூலம் பூர்த்தியாகிவிடும் என்றும் கூறப்படுகிறது.

உடல் எடையை குறைப்பதற்கு பேரிக்காயில் உள்ள கலோரிகள் பயன்படும் என்றும், பேரிக்காய் போன்ற குறைந்த கலோரிகள் கொண்ட உணவை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடை சீக்கிரம் குறையும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், பேரிக்காய்கள் 84 சதவீதம் நீர் உள்ளதால், நீர்ச்சத்து உடலுக்கு தேவையான அளவு கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

பேரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது என்றும், ஆரோக்கியமான உடல் மற்றும் செரிமான அமைப்பும் சிறப்பாக செயல்படும் என்று கூறப்படுகின்றது.
