காதலர்கள் கொண்டாடும் காதலர் வாரம்

ByEditor 2

Feb 7, 2025

காதலர் தினம் 14ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், அதற்கு முந்தைய வாரம் என்னென்ன நாளாக கொண்டாடப்படுகின்றது என்பதை தெரிந்து கொள்வோம்.

பிப்ரவரி மாதம் பிறந்துவிட்டாலே காதலர்களுக்கு பயங்கர கொண்டாட்டம் என்று தான் கூற வேண்டும். பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகின்றது.

ஆனால் 14ம் தேதி மட்டும் தங்களது காதலை கொண்டாடுவதில்லை… ஒரு வாரத்திற்கு முன்பே ஆரம்பித்துவிடுகின்றனர்.

அவ்வாறு கொண்டாடும் காதலர் வாரத்தை குறித்து எந்தெந்த நாளில் என்ன கொண்டாட்டம் இருக்கும்… இது எதை குறிக்கின்றது என்பதை தெரிந்து கொள்வோம்.

Valentine

பிப்ரவரி 07: ரோஸ் டே

காதலர் வாரத்தின் முதலான பிப்ரவரி 7ம் தேதி ரோஜா தினமாக கொண்டாடப்படுகின்றது. அதாவது காதலின் சின்னமான ரோஜாக்களைக் கொடுத்து தங்களது அன்பையும், உணர்வுகளையும் வெளிப்படுத்துவார்கள். 

வெள்ளை நிறம் : புதிய தொடக்கங்கள், நல்லிணக்கம் அல்லது தூய்மையைக் குறிக்கிறது. 

மஞ்சள் நிறம் : நட்பைக் குறிக்கிறது.

சிவப்பு நிறம்: அன்பைக் குறிக்கிறது.

பிங்க் நிறம் : பக்தியையும், மகிழ்ச்சியையும் குறிக்கிறது.

Valentine

பிப்ரவரி 08 – ப்ரொபோஸ் டே

இரண்டாவது நாளான பிப்ரவரி 8ம் தேதி தங்களது காதலை வெளிப்படுத்தும் தினமாகவும், முன்மொழிவு தினமாகவும் கொண்டாடப்படுகின்றது. அதாவது வித்தியாசமான முறையில் வெளிப்படுத்த நினைத்தாலோ, திருமணம் செய்து கொள்ள விரும்பினாலோ புதுமையான முறையில் அதனை வெளிப்படுத்துவார்கள்.

பிப்ரவரி 9- சாக்லேட் டே

காதலர் தினத்தின் மூன்றாவது நாளை சாக்லேட் தினமாக கொண்டாடுகின்றனர். அதாவது இனிப்புகளை பரிமாறி மகிழ்ச்சியை நினைவுகூறும் தினமாக பார்க்கப்படுகின்றது.

பிப்ரவரி 10 – டெடி டே

நான்காவது தினத்தை அரவணைப்பு, பாசத்தை பிரதிபலிக்கு தினமாக கொண்டாடப்படுகின்றது. அதாவது நான் உனக்காக இருக்கிறேன் என்பதை டெடி பொம்மைகளைக் கொடுத்து காதலை வெளிப்படுத்துவது ஆகும்.

Valentine

பிப்ரவரி 11 – ப்ராமிஸ் டே

காதலர் தினத்தின் ஐந்தாவது நாள் வாக்குறுதி தினம் ஆகும். இந்நாளில் அன்பு, விசுவாசம் மற்றும் தங்களது வாக்குறுதிகளின் மூலம் தங்களது காதலின் ஆழத்தை அதிகரிக்கின்றார்கள். மேலும் உறவில் நம்பிக்கையையும், புரிதலையும் காட்டுவதாகும்.

பிப்ரவரி 12 – ஹக் டே

காதலர் தினத்திற்கு ஆறாவது நாள் கொண்டாட்டமாக வார்த்தை இல்லாமல் அரவணைப்பு மூலமாக தங்கள் காதலை வெளிப்படுத்துவார்கள்.  

பிப்ரவரி 13 – கிஸ் டே

காதலர் தினத்தின் 7வது நாளாக முத்த தினம் கொண்டாடப்படுகின்றது. தங்களது காதலையும், பாசத்தையும்  அன்பான முத்தத்தின் மூலமாக பகிர்ந்து கொள்கின்றனர். 

பிப்ரவரி 14 – காதலர் தினம்

காதலர் வாரத்தின் கடைசி தினம் காதலர் தினமாக அனுசரிக்கின்றனர். இந்நாளில் அன்பு, பாசத்தின் அடையாமாக விலை உயர்ந்த, மறக்க முடியாத பரிசுகளை பரிமாறிக் கொள்கின்றனர்.

Valentine

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *