போனை வைரஸில் இருந்து பாதுகாப்பது எப்படி?

ByEditor 2

Feb 5, 2025

நாம் பயன்படுத்திவரும் ஸ்மார்ட்போனில் வைரஸ் தாக்காமல் எப்படி பாதுகாக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஸ்மார்ட்போன்களில் வைரஸ்

இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் என்பது அனைத்து மக்களும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருப்பவர்களிடம் கூட நொடிப்பொழுதில் முகம் பார்த்து பேசும் வசதி உள்ளது. மேலும் அதுமட்டுமின்றி பணபரிவர்த்தனைக்கு மிகவும் உதவியாக இருந்து வருகின்றது.

Malware: ஸ்மார்ட்போனை வைரஸில் இருந்து பாதுகாப்பது எப்படி? இதோ எளிய வழிகள் | How To Protect Smartphone From Malware

ஆனால் ஸ்மார்ட்போன்களில் மால்வேர்(malware) எனப்படும் வைரஸ்கள் தீங்கு விளைவிக்கின்றது. இந்த வைரஸ் தாக்குதலினால் ஹேக்கர்கள் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்களை தவறான வழிகளில் பயன்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.

அதுமட்டுமின்றி கணக்கில் இருக்கும் பணத்தை ஹேக்கர் எடுத்துவிடும் சம்பவமும் அரங்கேறி வருகின்றது.

எப்படி பாதுகாப்பது?

ஸ்மார்ட்போன்களை வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்க கூகுள் நிறுவனம், ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு Play Protect அம்சத்தினை அறிகுப்படுத்தியுள்ளது.

இந்த அம்சத்தை கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

குறித்த செயலி நமது ஸ்மார்ட்போனில் ஏதேனும் வைரஸ் பாதிப்பினைக் கண்டறிந்து பயனரை எச்சரிக்கும். இதன் மூலம் மொபைல் போனை பாதுகாத்து்க கொள்ளலாம்.

Malware: ஸ்மார்ட்போனை வைரஸில் இருந்து பாதுகாப்பது எப்படி? இதோ எளிய வழிகள் | How To Protect Smartphone From Malware

ஒரு செயலியை நமது மொபைலில் பதிவேற்றம் செய்கின்றோம் என்றால் அதனை நன்கு சோதனை செய்த பின்பு செய்யவும். விளக்கத்தைப் படித்து ஸ்கிரீன்ஷாட்களைச் சரிபார்க்கவும்.

அதிகப்படியான பாப்-அப் விளம்பரங்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான அனுமதிகளை கண்டால் அந்த செயலிகளை பதிவிறக்கம் செய்யக் கூடாது.

மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களைத் தவிர்பதுடன், தெரியாத வலைத்தளங்களில் இருந்தும் பதிவிறக்கம் செய்யக்கூடாது.

Play Protect செயலியை எப்படி பயன்படுத்துவது?

உங்களது ஸ்மார்ட்போனில் கூகுள் பிளே ஸ்டோருக்குள் சென்று Play Protect என்ற ஆப்ஷனை தெரிவு செய்யவும்.

பின்பு ஸ்கேன் என்பதை க்ளிக் செய்தால், நமது மொபைல் வைரஸ் தாக்கம் இருந்தால் குறித்த செயலி அலார்ட் செய்யுமாம்.

நீங்கள் உடனடியாக வைரஸ்  சம்பந்தப்பட்ட செயலியை டெலிட் செய்து பாதுகாக்கவும்.

Malware: ஸ்மார்ட்போனை வைரஸில் இருந்து பாதுகாப்பது எப்படி? இதோ எளிய வழிகள் | How To Protect Smartphone From Malware

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *