உடற்பயிற்சியின் போது மாரடைப்பு வருவதற்கான காரணம்

ByEditor 2

Feb 5, 2025

உடலையும் இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். சமீபத்தில் உடற்பயிற்ச்சி செய்வதால் மாரடைப்பு வருகின்றன என சில செய்திகள் வெளியாகின.

இதன் காரணமாக உடற்பயிற்சி செய்யும் போதும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்குமா என்ற கேள்வி மக்கள் மனதில் எழத் தொடங்கியுள்ளது.

உடற்பயிற்சியின் போது மாரடைப்பு வருவதற்கான காரணம் என்ன? | Warning Signs Of Heart Problems During Exercise

உடற்பயிற்சி செய்வது இதயத்தின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது ஒரு நல்ல அழுத்தம். இருப்பினும், இதய நோய் அல்லது அதிக கொழுப்பு உள்ளவர்கள்.

உடற்பயிற்சியின் போது அதிகரிக்கும் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் காரணமாக அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம். இதற்கான விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

 உடற்பயிற்ச்சியின் போது மாரடைப்பு

இதய நோய், அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் சீரற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கம் உள்ளவர்கள் அதிக உடற்பயிற்ச்சியில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

ஒரு நாளைக்கு 75 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அல்லது வலிமை பயிற்சி போன்றவற்றை செய்யலாம்.

உடற்பயிற்சியின் போது மாரடைப்பு வருவதற்கான காரணம் என்ன? | Warning Signs Of Heart Problems During Exercise

உடற்பயிற்ச்சிக்கு நீங்கள் புதியவர் என்றால் உடனடியாக வேகத்தை அதிகரிக்காமல் மெதுவாக செய்வது அவசியம். இதன்போது  மார்பு வலி, தலைச்சுற்றல் அல்லது மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக பயிற்ச்சியை நிறுத்த வேண்டும்.

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடற்பயிற்ச்சியைத் தொடங்குவதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.

உடற்பயிற்சி சரியாகச் செய்யும்போது, ​​அது இதயத்தை பலப்படுத்துகிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் நீண்ட காலத்திற்கு மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.

உடற்பயிற்சியின் போது மாரடைப்பு வருவதற்கான காரணம் என்ன? | Warning Signs Of Heart Problems During Exercise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *