தவணைப் பரீட்சைகள் ஆரம்பம்

ByEditor 2

Feb 3, 2025

வடமத்திய மாகாணத்தில் இரத்துச் செய்யப்பட்ட 11 ஆம் தர தவணைப் பரீட்சைகள் இன்று (03) முதல் மீண்டும் ஆரம்பமாகும் என்று மாகாணக் கல்விச் செயலாளர் சமன் குமார ஜெயலத் தெரிவித்தார்.

வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 11 ஆம் தர இறுதித் தவணை பரீட்சை வினாத்தாள் கசிவு சம்பவத்தால் இரத்துச் செய்யப்பட்டன.

அதற்கமைய, சாதாரண தரப் பரீட்சைக்கு வழங்கப்படுகின்ற அதே பொலிஸ் பாதுகாப்பின் கீழ் இந்த தவணைப் பரீட்சையை நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வட மத்திய மாகாண கல்விச் செயலாளர் சமன் குமார ஜயலத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *