குழந்தைகளுக்கு காலையில் சத்தான உணவு என்ன கொடுக்கலாம்?

ByEditor 2

Jan 30, 2025

குழந்தைகளுக்கு ஆரொக்கியமான காலை உணவுகளின் பட்டியலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம் ஆகும். அதாவது மாறிவரும் பருவநிலை மற்றும் தவறான உணவுப்பழக்கம் என அனைத்தும் குழந்தைகளை நோய்களுக்கு ஆளாக்குகின்றது.

பெரும்பாலான குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை விரும்பாமல், ஜங்க் ஃபுட் இவற்றினையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் இவை ஆரோக்கியத்தை கெடுப்பது மட்டுமின்றி, பல நோய்களையும் கொண்டு வந்துவிடுகின்றது.

குழந்தைகளுக்கு காலையில் சத்தான உணவு என்ன கொடுக்கலாம்? | Healthy Breakfast For Kids

அதிலும் இரவு நேரத்தை விட காலை நேரத்தில் தான் குழந்தைகளுக்கு சத்தான, ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும். இங்கு குழந்தைகளுக்கு காலையில் கொடுக்க வேண்டிய உணவுகளைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

குழந்தைகளின் ஆரோக்கியமான காலை உணவு

முட்டை காலை உணவிற்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். இதில் கால்சியம், புரதம், வைட்டமின் டி, வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் காலையில் அவித்த முட்டை கொடுப்பதால் அவர்களின் எலும்பு நல்ல வளர்ச்சி பெறுமாம். 

குழந்தைகளுக்கு காலையில் சத்தான உணவு என்ன கொடுக்கலாம்? | Healthy Breakfast For Kids

இதே போன்று அவல் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கின்றது. இதனை உப்புமாகவோ அல்லது ஊற வைத்து நாட்டு சர்க்கரை சேர்த்தோ சாப்பிடவும்.

கண்ணாடி டம்ளரில் எலுமிச்சை போட்டு வைத்தால் என்ன பலன் தெரியுமா?

குழந்தைகளின் காலை உணவில் கட்டாயம் கீரை இருக்க வேண்டுமாம். மூளை வளர்ச்சி மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும் இதனை, கீரை தோசை, கீரை இட்லி, கீரை வடை என செய்து சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு காலையில் சத்தான உணவு என்ன கொடுக்கலாம்? | Healthy Breakfast For Kids

மேலும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஓட்ஸ் முக்கிய பங்கு வகிக்கின்றது. குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் ஓட்ஸில் காலை உணவு செய்து கொடுக்கலாம். இட்லி, தோசை என செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

காய்கறி மற்றும் பழங்களில் சாலட் செய்து கொடுக்கலாம். இதில் நீங்கள் தயிர் அல்லது தேன் கலந்து சாப்பிட்டால் இதனை சுவை இரு மடங்காக அதிகரிக்கும்.

குழந்தைகளுக்கு காலையில் சத்தான உணவு என்ன கொடுக்கலாம்? | Healthy Breakfast For Kids

காலை உணவில் ஸ்மூத்தி என்பது மிகவும் ஆரோக்கியம் நிறைந்ததாகும். அதாவது பல்வேறு வகையான பழங்களை கொண்டு தயார் செய்யப்படும் ஸ்மூத்தி குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *