தென் சூடானில் விபத்துக்குள்ளான விமானம்

ByEditor 2

Jan 30, 2025

இரண்டாம் இணைப்பு

தெற்கு சூடானில் ஏற்பட்ட விமான விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.  

நேற்றைய தினம், 21 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற விமானமொன்று தென் சூடானில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இவ்விபத்தில் சிக்கிய மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முதலாம் இணைப்பு 

21 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற விமானமொன்று தென் சூடானில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர்.

குறித்த விமானம், தென் சூடானின் எண்ணெய் கிணறு பகுதியில் இருந்து புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக நடந்த விபத்துக்கள்

தென் சூடானில் இதற்கு முன்னர் பல விமான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. 2015ஆம் ஆண்டில், ஜூபாவில்(Juba) இருந்து புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் 37 பேர் வரை உயிரிழந்தனர்.

தென் சூடானில் விபத்துக்குள்ளான விமானம்! மேலும் இருவர் பலி | 18 Killed In South Sudan Plane Crash

அதேவேளை, 2018ஆம் ஆண்டில், ஜூபாவிலிருந்து யிரோலுக்குச்(Yirol) சென்ற சிறிய விமானமொன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 19 பேர் வரை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *