அடிப்பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்வது எப்படி?

ByEditor 2

Jan 29, 2025

சமைக்கும் போது அடிப்பிடித்த பாத்திரத்தினை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக சமைக்கும் போது பாத்திரம் அடிபிடிப்பது என்பது சாதாரண விடயம் தான். ஆனால் அதனை சுத்தம் செய்வது என்பது மிகப்பெரிய வேலையாகும்.

ஆம் மோசமாக அடிப்பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்வதற்கு சில வழிமுறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

அடிப்பிடித்த பாத்திரத்தை வெறும் 2 நிமிடங்களில் சுத்தம் செய்வது எப்படி? | Clean Burnt Vessel How To Clean

அடிப்பிடித்த பாத்திரத்தை எவ்வாறு சுத்தம் செய்வது?

அடிப்பிடித்த பாத்திரத்தில் பேக்கிங் சோடா மற்றும் சிறிது தண்ணீர் கலந்து சுமார் 20 நிமிடம் ஊற வைத்து, நன்றாக ஸ்க்ரப் கொண்டு தேய்த்து கழுவினால் குறை சுலபமாக சென்றுவிடும்.

அடிப்பிடித்த பாத்திரத்தில் வினிகரை கொண்டு சுத்தம் செய்தால், கரை உடனே சரியாகிவிடும். ஏனெனில் வினிகரில் அசிடிட்டி ஆசிட் உள்ளதால், பாத்திரத்தில் கரையை விரைவில் நீக்கிவிடும்.

அடிப்பிடித்த பாத்திரத்தினை கழுவுவதற்கு மற்றொரு சிறப்பான பொருள் எலுமிச்சை ஆகும். எலுமிச்சையில் இருக்கும் அசிடிட்டி அமிலம் பாத்திரத்தில் இருக்கும் விடாபிடியான கறையை சுலபமாக நீக்கிவிடும். பாத்திரத்தில் எலுமிச்சை சாறு ஊற்றி ஒரு 15 நிமிடம் ஊற வைத்த பின்பு சுத்தம் செய்தால் எளிதில் கறை நீங்கிவிடும்.

அடிப்பிடித்த பாத்திரத்தை வெறும் 2 நிமிடங்களில் சுத்தம் செய்வது எப்படி? | Clean Burnt Vessel How To Clean

இதே போன்று உப்பை பயன்படுத்தி அடிப்பிடித்த பாத்திரத்தினை கழுவலாம். இதுவும் குறித்த கறையை மிகவும் சுலபமாக நீக்கிவிடும்.

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளி சாஸைக் கொண்டு அடிப்பிடித்த பாத்திரத்தினை சுலபமாக சுத்தம் செய்யலாம். ஏனெனில் தக்காளியில் இருக்கும் ஆசிட்டானது பாத்திரத்தில் உள்ள கறைகளை விரைவில் நீக்கிவிடும்.

இதே போன்று சூடு தண்ணீரைக் கொண்டு 30 நிமிடம் ஊற வைத்து, பின்பு தேய்த்து கழுவினால் கறை நீங்கிவிடும். அதே போன்று தயிர் கொண்டு தேய்த்து எடுத்தாலும் அடிப்பிடித்த கறை போய்விடுமாம்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *