குழந்தைக்கான வளர்ச்சி மைல்கல்கள்..

ByEditor 2

Jan 28, 2025

பொதுவாக ஒரு குழந்தை பிறந்தது முதல் அதன் 1 வயது வரையான காலகட்டம் குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய காலகட்டமாக பார்க்கப்படுகின்றது.

குழந்தையின் வளர்ச்சி படிநிலைகள் குறித்து தாய்மார்கள் அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

ஒரு குறிப்பிட்ட வயதில் உங்கள் குழந்தை எவ்வாறு கற்றுக்கொள்ள வேண்டும், விளையாட வேண்டும், பேச வேண்டும் அல்லது செயல்பட வேண்டும் என்பதை வளர்ச்சி மைல்கற்கள் குறிப்பிடுகின்றன. இது குறித்து முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

 பிறந்த குழந்தையின் முதல் 3 மாதம் 

குழந்தை வளர்ச்சியை ஆராய்வது ஒரு தனிக்கலையாகவே பார்க்கப்படுகின்றது. பொதுவாக குழந்தை வேகமாக வளரும் போது அதிகமாகவே கற்றுகொள்வார்கள்.

குழந்தைக்கான வளர்ச்சி மைல்கல்கள்... அம்மாக்கள் தெரிஞ்சுக்க வேண்டியது என்னென்ன? | Growth And Development Milestones In Tamil

ஆனால் பிறந்த குழந்தையின் முதல் மூன்று மாத காலங்கள் மிக மிக முக்கியமானது அந்த நிலையில் குழந்தைகளிடையே ஏற்படும் சிறிய மாற்றங்களையும் கூர்ந்து கவனிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

அந்த காலகட்டத்தில் தாய் குழந்தையோடு அரவணைப்புடன் இருக்க வேண்டும். குழந்தையின் தூக்கம், பசியாறுதல், இயற்கை உபாதை என அனைத்திலும் தாய் அன்போடு பராமரிக்க வேண்டும். தாயின் சரியான அரவணைப்பு குழந்தையின் மூளை வளர்ச்சியை சீராக வைத்திருக்கும். 

குழந்தைக்கான வளர்ச்சி மைல்கல்கள்... அம்மாக்கள் தெரிஞ்சுக்க வேண்டியது என்னென்ன? | Growth And Development Milestones In Tamil

பிறந்த குழந்தை சராசரியாக மாதம் தோறும் 0.7 முதல் 0.9 கிலோ வரை உயர வேண்டும்.  2. 5 முதல் 4. செ.மீ வரை வளரும். அவர்களது தலைசுற்றளவு ஒவ்வொரு மாதமும் சுமார் 1. 25 செ.மீ அதிகரிக்கும்.இந்த வளர்ச்சி சீராக இருக்கின்றதா என்பது குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

பொதுவாக குழந்தை பிறந்த பின்னர் உடனடியாக எடை இழக்கின்ற போதிலும் ஆரோக்கியமான குழந்தைகள் வழக்கமாக் சுமார் 2 முதல் 3 வாரங்களில் பிறப்பு எடையை அடைந்துவிடுவார்கள். அதன் பின்னர்  தொடர்ந்து எடை சிறிதேனும் அதிகரிப்பை காட்ட வேண்டும். அப்போது தான் ஆரோக்கியம் சீராக இருக்கின்றது என்று அர்த்தம். 

குழந்தைக்கான வளர்ச்சி மைல்கல்கள்... அம்மாக்கள் தெரிஞ்சுக்க வேண்டியது என்னென்ன? | Growth And Development Milestones In Tamil

குழந்தை பிறக்கும் போதே எடை அளவிடப்பட்டு குறிக்கப்படும் அதன் பின்னர் மருத்துவர் அல்லது செவிலியர் அவர்களது வளர்ச்சியை அட்டவணையில் தவறாமல் குறித்துவருவார்கள். அதில் ஏதேனும் குறைப்பாடுகள் இருப்பின் அவ்வப்போது ஆலோசனையும் வழங்குவார்கள். 

குழந்தைக்கான வளர்ச்சி மைல்கல்கள்... அம்மாக்கள் தெரிஞ்சுக்க வேண்டியது என்னென்ன? | Growth And Development Milestones In Tamil

முதல் வாரம்

ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்து முதல் வாரத்தில் தங்களை கவனித்துக் கொள்பவர்களின் குரலை அடையாளம் காண கற்றுக் கொள்கிறார்கள். இது மொழி வளர்ச்சியின் ஆரம்ப நிலையாகும்.

2 ஆம் வாரம் 

ஆரோக்கியம் சீராக இருக்கும் பட்சத்தில் குழந்தைகள் இரண்டாவது வாரம் ஆகும் போது குறுகிய தூரத்தில் உள்ள பொருட்களின் மீது கவனம் செலுத்த தொடங்குவார்கள். அத்துடன் தெரிந்த குரலுக்கு லேசான துலங்களை காட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.

3 ஆம் வாரம் 

குழந்தைகள் அரவணைத்துக் கொள்வதை கற்றுக் கொள்ள ஆரம்பிக்கின்றார்கள். தங்களை அரவணைப்போரிடம் அமைதியாகவும் சுகமாகவும் இருக்க கற்றுக்கொள்கின்றார்கள். 

4 ஆம் வாரம்

குழந்தையின் வளர்ச்சி காலகட்டத்தில் ஒரு மாதத்தை அடையும் போது  “கூ”, “ஆ” என்ற ஒலியை எழுப்ப ஆரம்பித்துவிடுவார்கள். 

குழந்தைக்கான வளர்ச்சி மைல்கல்கள்... அம்மாக்கள் தெரிஞ்சுக்க வேண்டியது என்னென்ன? | Growth And Development Milestones In Tamil

1 மாத குழந்தையின் வளர்ச்சி கட்டம்

ஒரு மாத குழந்தையின் அசைவுகள் மென்மையாகவும் சீரற்றதாகவும் இருக்கும். இந்த நிலையில் குழந்தைகள் தானாக புன்னகைக்க அல்லது சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

அத்துடன் தங்கள் உணர்வுகளுடன் ஒலிகளை இணைக்க ஆரம்பித்துவிடுவார்கள். கழுத்து தசைகள் உறுதியாக சற்று உறுதியாக தொடங்கும். அதனால் கழுத்தை அசைக்க ஆரம்பிக்கின்றார்கள்.

2 மாத குழந்தையின் வளர்ச்சி கட்டம்

குழந்தைக்கான வளர்ச்சி மைல்கல்கள்... அம்மாக்கள் தெரிஞ்சுக்க வேண்டியது என்னென்ன? | Growth And Development Milestones In Tamil

இரண்மாம் மாதத்தில் குழந்தைகள் அதிக ஆர்வம் உள்ளவர்களாகவும், குரலை உயர்த்திப் பேசினால் அதற்கான துலங்களை உணர்வுகளை வெளிப்படுத்தும் நிலைக்கு வளர்சியடைந்திருப்பார்கள். 

கூட்டத்தில் இருந்தாலும் தெரிந்த முகங்களை அடையாளம் காணும் ஆற்றல் இந்த காலகட்டத்தில் வந்துவிடும்.  குழந்தைகள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள அதிக ஆர்வம் காட்ட ஆரம்பிப்பார்கள். புதிய ஒலிகளை அல்லது வித்தியாசமான ஒவிகளுக்கு துலங்களை காட்டுவார்கள்.

மேலும் தங்களின் கைகளின் செயல்பாட்டை புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள். கைகளை அசைத்து விளையாட ஆரம்பித்துவிடுவார்கள்.

3 மாத குழந்தையின் வளர்ச்சி கட்டம்

குழந்தைக்கான வளர்ச்சி மைல்கல்கள்... அம்மாக்கள் தெரிஞ்சுக்க வேண்டியது என்னென்ன? | Growth And Development Milestones In Tamil

குழந்தையின் மூன்று மாதங்களில் குழந்தை உயரம் பெரியதாக இருக்கும். பெரிய அளவிலான குழந்தைகளுக்கு பிறந்த போது எடுத்த ஆடைகள் போட முடியாமல் போகும்.

குழந்தையின் உயரம் போன்று எடையிலும் அதிகரிப்பு இருக்கும். இது குழந்தையின் மிக முக்கியமான காலகட்டமாகும். சிரிப்பது, தெளிவற்றுப் பேசுவது, அமைதியாக சிரிப்பது ஆகிய விடயங்களை குழந்தை செய்ய ஆரம்பிக்கும். 

அந்த பருவத்தில் குழந்தைகள் உருண்டு படுக்க கற்றுக் கொள்கின்றது. கழுத்து தசைகள் மற்றும் விலா எலும்பு ஆகியவற்றுடன் வயிற்று தசைகளும் வலுவாக தொடங்கும். 

பெரும்பாலும்  மூன்று மாதங்களில் குழந்தையின் வளர்ச்சி மூன்று பகுதிகளை சுற்றி இருக்கும்.உடல், அறிவாற்றல் மற்றும் உணர்ச்சி.

குழந்தை தனது தலையை 45 டிகிரி கோணத்துக்கு உயர்த்தமுடியும். மேலும் குழந்தையின் கழுத்து தசைகளில் வளரும் வலிமை தாயின் மடியில் இருந்தாலும் தலையை தூக்கி வைக்கும் அளவுக்கு வலிமை இருக்கும்.

உங்கள் குழந்தை ஒலியை நோக்கி தலையை திருப்புவார்கள். அவர்களது உணர்வுகள் இசை அல்லது குரலை நோக்கி திரும்பும்.

இந்த கட்டத்தில் குழந்தை மகிழ்ச்சியில் சத்தமிடுவார்கள். கூச்சல் நிறைந்த இடங்களில் குதூகலமாக இருப்பதை வெளிப்படுத்துவார்கள்.

குழந்தைக்கான வளர்ச்சி மைல்கல்கள்... அம்மாக்கள் தெரிஞ்சுக்க வேண்டியது என்னென்ன? | Growth And Development Milestones In Tamil

6 மாத குழந்தையின் வளர்ச்சி கட்டம்

இந்த வளர்ச்சி கட்டத்தில் குழந்தைகள் உடன் இருப்பவரின் உணர்ச்சிகளையும் குரலையும் புரிந்து கொள்வார்கள்.

உணவில் இருந்து பிடித்த பொருள் வரை அனைத்தையும் பிரித்தறியும் ஆற்றல் நன்றாக வளர்ச்சியடைந்திருக்கும்.

பெற்றோரின் அழைப்புக்கு அவர்கள் சந்தோஷமாக பதிலளிப்பார்கள். குழந்தை திட உணவை சாப்பிட தொடங்க தயாராக இருப்பார்கள். குழந்தைகள் இந்த பருவத்தில் தவழ்ந்து செல்ல தொடங்கிவிடுவார்கள்.

1 வயது குழந்தையின் வளர்ச்சி கட்டம்

குழந்தைக்கான வளர்ச்சி மைல்கல்கள்... அம்மாக்கள் தெரிஞ்சுக்க வேண்டியது என்னென்ன? | Growth And Development Milestones In Tamil

முதல் வயதை பூர்த்தி செய்த குழந்தைகள்  பிறகு மாதத்துக்கு அரை பவுண்ட் அதிகரித்து சராசரியாக  நான்கு  முதல் ஐந்து அங்குலங்கள் வளர்சியடைய வேண்டும். 

இந்த நேரத்தில், பெரும்பாலான குழந்தைகள் அம்மா அல்லது அப்பா போன்ற வார்த்தைகளை உச்சரித்து அழைக்கத் தொடங்குகிறார்கள்.

இந்த வழிகாட்டி புதிதாக பெற்றோரானவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்க முடியும் என்றாலும், குழந்தையின் வளர்ச்சி கட்டத்தை அவர்களை கூர்ந்து கவனித்தால் மட்டுமே குழந்தைகளிடம் ஏதேனும் ஆரோக்கிய பிரச்சினைகள் இருந்தால் அதனை முறையாக சிகிச்சை பெற முடியும். 

குழந்தைக்கான வளர்ச்சி மைல்கல்கள்... அம்மாக்கள் தெரிஞ்சுக்க வேண்டியது என்னென்ன? | Growth And Development Milestones In Tamil

குழந்தைகளின் வளர்ச்சி படிநிலைகளில் அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியம். குறிப்பாக முதல் குழந்தையை பெற்றெடுத்தவர்கள் இது குறித்து கூடுதவ் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த வளர்ச்சி படிநிலைகளில் ஏதேனும் குறைப்பாடுளை உணரும் பட்சத்தில்  உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெற்றுகொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *