1956ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 2 பில்லியன் டொலர்களையே அமெரிக்கா இலங்கைக்கு உதவியாக வழங்கியுள்ளது. அப்படியானால், அமெரிக்காவால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் மிகக் குறைவு.
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பொறுத்தவரையில், இலங்கையிடம் இருந்து சாதகம் ஒன்றை பெற்றால் மட்டும் தான் நாட்டிற்கு நிதி கிடைக்கும்.
அத்துடன், இலங்கை மற்றும் சீனாவுக்கிடையில் நெருக்கமான உறவு இருப்பதால், அமெரிக்கா – சீனா மோதலில் இலங்கை முக்கிய புள்ளியாக இருக்கும்.
இலங்கையை பொறுத்தவரையில், அமெரிக்காவின் பிடியில் இருந்து நழுவ முடியாத சூழ்நிலையில் இருப்பதோடு ட்ரம்ப்பிடம் இருந்து உதவிகளும் கிடைக்காது.
இதனால், கடந்த காலங்களை விட இலங்கையின் நிலைமை மிக மோசமாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,