சிங்கள யுவதியை காதலித்த தமிழ் இளைஞன்

ByEditor 2

Jan 27, 2025

சிங்கள யுவதியை காதலித்த தமிழ் இளைஞனின் தந்தையை யுவதியின் தாத்தா கொலை செய்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (26) இடம்‌ பெற்ற இச்சம்பவத்தில் 03 பிள்ளைகளின் தந்தையான ஜோசப் இராஜேந்திர குமார் என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இரு வீட்டாரின் பெற்றோர்கள் விருப்பம்
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஓபநாயக்க பொலிஸ் பிரிவிலுள்ள ஹுனுவலை தோட்டத்தில் இரு இனங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து அப்பகுதி‌ கிராம சேவையாளர்ரின் தலைமையில் பிரதான வீதியொன்றை “தூய்மையான இலங்கை” ‌வேலைத்திட்டத்தின் கீழ் ‌சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

சுமார் 100 பேர் கலந்து‌ கொண்ட சிரமதானத்தில் சிங்கள் யுவதி ஒருவரை காதலித்த , தோட்ட தமிழ் இளைஞர் ஒருவரின் தந்தையும் யுவதியின் தாத்தாவும் கலந்து கொண்டுள்ளனர் .

இந்நிலையில் அவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியது. இதன் போது பெண்ணின் தாத்தா சிரமதான பணிக்கு கொண்டு வந்த மண் வெட்டியால் தலையில் தாக்கியதில் தமிழ் இளைஞனின் தந்தை தலையில் பலத்த காயம் மேற்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை அவர்களின் காதலுக்கு இரு வீட்டாரின் பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்த போதிலும் பெண்ணின் தாத்தா மட்டுமே நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

திருமணம் செய்யாது காதல் ஜோடி, காதலன் வீட்டில் பல மாதங்களாக தங்கி இருப்பது தொடர்பில் பெண்ணின் தாத்தா வினவிய போதே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பிரேத பரிசோதனைக்காக பிரேதம் காவத்தை பொது வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபரை கைது செய்த பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *