உக்ரேனிய பிரஜைக்கு நேர்ந்த பரிதாபம்

ByEditor 2

Jan 27, 2025

அஹுங்கல்ல கடற்கரையில் நீராடச்சென்ற வௌிநாட்டு பிரஜைகள் மூவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் இரு அதிகாரிகளால் அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

நீரோட்டத்தில் சிக்கியவர்களில் ஆணொருவரும் இரண்டு பெண்கள் இருவரும் உள்ளடங்குவதாக தெரியவருகிறது.

இருப்பினும், ஆபத்தான நிலையில் இருந்த 54 வயதான உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆண், பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (26) பிற்பகல் நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிர் பிழைத்த இரண்டு சிறுமிகளும் 13 மற்றும் 17 வயதுடைய உக்ரேனியர்களாவர்.

சடலம் பலபிட்டிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *