பண்டாரகம – மில்லகஸ் சந்தி பகுதியில் சட்டவிரோத மதுபானங்களுடன் வாகனமொன்றில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 337.5 லீற்றர் சட்டவிரோத மதுபானங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
நேற்று (23) இரவு கெப் ரக வாகனமொன்றில் குறித்த சட்டவிரோத மதுபானங்கள் கொண்டுசெல்லப்பட்ட போது, பண்டாரகம பொலிஸ் அதிகாரிகளால் மேற்படி கெப் வாகனம் மடக்கிப் பிடிக்கப்பட்டது.
இதன்போது, கெப் வாகனம் மற்றும் சட்டவிரோத மதுபானங்களால் ஈட்டப்பட்டதாக சந்தேககிக்கப்பட்டும் 121,298 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கிதெல்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஆணொருவரும் 43 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.