பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, கடற்டபடை நிவாரணக் குழு

ByEditor 2

Jan 20, 2025

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பதவிய மற்றும் புத்தங்கல பகுதிகளுக்கு இரண்டு கடற்படை பேரிடர் நிவாரணக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமானது. அதன்படி, புத்தங்கல பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணக் குழுக்கள் ஏற்கனவே நிவாரணம் வழங்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.

நிலவும் மழையுடனான காலநிலையால் பதவிய, மஹா ஓயா ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால் வெள்ள அபாயத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை பேரிடர் நிவாரணக் குழுக்கள் உயிர் காக்கும் உபகரணங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, வெள்ளத்தில் மூழ்கிய பதவிய-புத்தங்கல வீதியில் பொதுமக்களின் பாதுகாப்பான போக்குவரத்தை எளிதாக்குவது உட்பட பேரிடர் நிவாரண நடவடிக்கைகளை நிவாரணக் குழுக்கள் இன்று (19) காலை முன்னெடுத்திருந்தது.

அத்தோடு, நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ள அபாயத்துக்கு மத்தியில் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க 50 மேலதிக கடற்படை நிவாரண குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *