பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டம்

ByEditor 2

Jan 20, 2025

மொரட்டுவை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பிரதேசத்தில் உள்ள சிலரை கைது செய்யப்பட்டதாகக் கூறி, மொரட்டுவை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் 100இற்கும் மேற்பட்டோர் கூடி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எங்கள் செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் விசாரித்த போது,

மொரட்டுவை பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தின் முன் மின்பந்தல் கட்டப்பட்டு வருவதாவும், இதனால் அங்கிருந்த ஒரு குழு வீதியை மறித்து செயற்பட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதனால், அவர்களை அந்தப் பகுதியிலிருந்து அகற்ற போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகளை மக்கள் குழுவொன்று தடுத்துள்ளது.

இதன்போது, இரு பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டு தற்போது பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதோடு, இதன்போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததற்காக 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இருப்பினும், கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மொரட்டுவை பொலிஸ் நிலைய வளாகத்திற்கு வருகைதந்துள்ளனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்த அருட்தந்தை சிரில் காமினி உட்பட பல பாதிரியார்களும் வருகைதந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *