அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரன்தொம்பே குடாகலபுவே பகுதியில் கடலில் மிதந்த நிலையில் பெண்ணொருவர் நேற்று (17) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
கடலில் சடலம் ஒன்று மிதப்பதாக அம்பலாங்கொடை பொலிஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொாடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது பலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
