PHI உத்தியோகத்தரின் சடலம் மீட்பு

ByEditor 2

Jan 16, 2025

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி மலைமகள் வீதியிலுள்ள  வீடொன்றினுள்ளிருந்து ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் பொது சுகாதார பரிசோதகர் ஒருவருடையதென அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஏறாவூர் மிச்நகர் பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றி வந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பூட்டப்பட்ட வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, அறிந்த அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்க அமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் சொகோ தடயவியல் பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *