26 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை

ByEditor 2

Jan 11, 2025

சிறைச்சாலைக்குள் உணவுப் பாத்திரத்தின் அடிப்பகுதியில் ஹெராயின் மறைத்து கொண்டு சென்ற குற்றத்திற்காக, கொழும்பு மேல் நீதிமன்றம் 26 வயது இளைஞர் தேவராஜா லோரன்சுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

இந்த தீர்ப்பை நீதிபதி மஞ்சுள திலகரதன் இன்று (10-01-2025) வழங்கினார்.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் திகதி, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள தனது நண்பனுக்கு உணவு கொண்டு செல்ல பயன்படுத்திய வாளியின் போலி அடிப்பகுதியில், 25.09 கிராம் ஹெராயின் மறைத்து எடுத்துச் சென்றபோது, லோரன்ஸ் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்திற்காக சட்டமா அதிபர் ஹெராயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடர்ந்தார், நீண்ட விசாரணைகளின் பின்னர், அரசுத் தரப்பின் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார்.

இதனிடையே, குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை எடுத்துக்காட்டிய நீதிமன்றம், குற்றவாளி மீது ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான கடுமையான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *