பிறந்து பன்னிரண்டே நாட்களான குழந்தை உயிரிழப்பு

ByEditor 2

Jan 11, 2025

ஹோமாகம ஆதார மருத்துவமனையில் பிறந்து பன்னிரண்டே நாட்களான குழந்தை ஒன்று தாய்ப்பால் அடைத்து இறந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குழந்தையின் பெற்றோர் மருத்துவமனைமீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

உயிரிழந்த குழந்தை ஹோமாகம ஆதார மருத்துவமனையின் முன்கூட்டிய குழந்தைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை

மருத்துவமனை ஊழியர்கள் கவனக்குறைவாக தாய்ப்பால் கொடுத்ததால் குழந்தை இறந்ததாக குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். இறந்தவர் யுகன் உதயங்கா என்ற பன்னிரண்டு நாள் குழந்தையாகும். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 27 ஆம் திகதி காசல் மகளிர் மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை, குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை என்பதால், மேலதிக சிகிச்சைக்காக அதே நாளில் ஹோமாகம ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 8 ஆம் திகதி அதிகாலையில் தாய் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவென , குழந்தையைப் பார்க்கச் சென்றபோது, ​​குழந்தை பால் வாந்தி எடுத்த நிலையில், குளிர்ச்சியாகவும், எதிர்வினையாற்றாமலும் இருப்பதைக் கண்டுள்ளார்.

இதையடுத்து , சந்தேகப்பட்ட தாய், வார்டில் பணிபுரியும் ஊழியர்களிடம் தகவல் தெரிவிக்க தேடியும், எவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. விசாரித்ததில், அனைத்து மருத்துவமனை ஊழியர்களும் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

நுரையீரலுக்குள் சென்ற பால் 

பின்னர், குழந்தையை மருத்துவரிடம் கொண்டு சென்றபோது ​​ , நுரையீரலுக்குள் பால் சென்றதே அவரது மரணத்திற்குக் காரணமாக அமைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று முன்தினம் (09) ஹோமாகம ஆதார மருத்துவமனையில் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது, அதில் குழந்தையின் நுரையீரலில் தாய்ப்பால் சிக்கியதாலேயே குழந்தை இறந்தது தெரியவந்தது.

மருத்துவமனை மீது குற்றம் சாட்டும் பெற்றோர் , மேலும் இந்த விஷயத்தில் முழுமையான விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கோருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாயார் ஹோமாகம தலைமையக காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளரான சிறப்பு மருத்துவர் எரங்க ராஜபக்ஷ, இந்த சம்பவம் தொடர்பாக தனக்கு புகார் கிடைத்துள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதாக நம்புவதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *