இளநீரை யாரெல்லாம் அருந்தக்கூடாது? 

ByEditor 2

Jan 9, 2025

உடலில் சில பிரச்சனை இருப்பவர்கள் இளநீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். இதனை குறித்த பதிவில் மிகவும் விரிவாக தெரிந்து கொள்வோம்.

இளநீர்

இனிப்பு வகைகளில் இருக்கும் சர்க்கரையைக் காட்டிலும், இளநீரில் குறைவான சர்க்கரை காணப்பட்டாலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு இதுவும் வழிவகுக்குமாம்.

இளநீரில் இயற்கையான சக்கரை உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் இளநீரை எடுப்பதற்கு முன்பு மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.

இளநீரில் சோடியம் குறைவாக இருந்தாலும், ஒரு சிலருக்கு இதனை உட்கொண்ட பின்னர், ரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்களை அனுபவிக்கலாம்.

இதே போன்று உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை உட்கொள்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல், இளநீர் பருகுவது கூடாது.

அதிக சத்துக்களைக் கொண்டிருந்தாலும், குழந்தைகளுக்கு மிதமான அளவே கொடுக்க வேண்டுமாம். ஏனெனில் அதிகப்படியான நுகர்வு உள்ளதால், அஜீரணம், வாயு, வயிற்று போக்கு, இரைப்பை குடல் பிரச்சனை ஏற்படுவதற்கு வழிவகுக்குமாம்.

தேங்காய் சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்படும் என்பதால், இளநீரை குறித்த நபர் பருகினால், அதே உணர்வு ஏற்படுவதுடன், தோல் அரிப்பு, சொறி அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

அதிக அளவு பொட்டாசியம் இளநீரில் உள்ளதால், சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை தீங்கு ஏற்படுத்துமாம்.

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், தங்கள் உணவில் இளநீரை சேர்த்து கொள்ள வேண்டாம். ஏனெனில் இதில் இருக்கும் இயற்கையான சர்க்கரையே காரணம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *