விபத்தில் இளைஞனொருவர் பலி

ByEditor 2

Jan 9, 2025

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் – வடமராட்சி வீதி வல்லை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்றையதினம்  இரவு 07.30 மணியளவில்  இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  

பொலிஸார் விசாரணை 

இதன்போது, பருத்தித்துறை – புற்றாளை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மணிகண்டன் என்ற 21 வயதுடைய இளைஞனொருவர் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது  மாட்டுடன் மோதுண்டு பின்னர்  எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. 

படுகாயமடைந்த இளைஞர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *