குறைந்த வயதில் உலகின் 7 கண்டங்களில் உள்ள மிக உயரமான சிகரங்களில் ஏறிய பெண் என்ற சாதனையை இந்தியாவைச் (India) சேர்ந்த சிறுமி ஒருவர் படைத்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த17 வயது சிறுமியான காமியா கார்த்திகேயன் என்பவரே சாதனை படைத்துள்ளார்.
வரலாற்றுச்சாதனை
இவர் ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ, ஐரோப்பாவின் எல்ப்ரஸ், அவுஸ்திரேலியாவின் கோஸ்கியுஸ்கோ, தென் அமெரிக்காவின் அகோன்காகுவா, வட அமெரிக்காவின் டெனாலி மற்றும் ஆசியாவின் எவரெஸ்ட் சிகரம் ஆகியவற்றின் சிகரங்களை எட்டினார்.
இந்நிலையில் தற்போது 7ஆவதாக அந்தாட்டிக்காவில் செயின்ட். வின்சென்ட் மலை சிகரத்தையும் எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.