இலங்கையின் புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்கு ( Lasantha Rodrigo )வெளிநாட்டு பெண் சல்யூட் அடித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இலங்கையின் 25வது இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவியேற்றதன் பின்னர் கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
அவரை, தியவடன நிலமே பிரதீப் நிலங்க வரவேற்றுள்ள நிலையில் தலதா மாளிகைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணியான வெளிநாட்டு இளம் பெண் ஒருவர் புதிய இராணுவத் தளபதிக்கு சல்யூட் செய்து மரியாதை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
