திருமணத்துக்கு முன்னரான சில வழிகாட்டல்கள்

ByEditor 2

Jan 3, 2025

ஒரு ஆண் திருமணம் செய்ய முன்னர் ஒரு மாதகாலத்திற்கு ஒரு பூனையை தத்தெடுத்து வளர்த்துப் பார்ப்பது நல்லது. 

அதன் மியவ் மியவ் மியவ் சத்தம் உனக்கு  பழகிப்போனால், வீட்டில் கண்ட கண்ட இடங்களில் முடி உதிர்ந்து கிடப்பதை சகிக்க முடிந்தால், புரியாத சிணுங்கள், காரணமின்றி முறைத்தல், கீறல், பிறாண்டல்களை ஏற்க முடிந்தால், சுற்றி சுற்றி வலம் வருவதன் காரணம் கண்டு தீர்க்க முடியுமானால், இப்போது நீ திருமண சட்டதிட்டங்களுக்கு தகுதி பெற்றுவிட்டாய் என்று அர்த்தம்!

👉 ஒரு பெண் திருமணம் செய்ய முன்னர் ஒரு சேவலை ஒரு மாதகாலம் தத்தெடுத்து வளர்த்துப் பார்ப்பது நல்லது. 

அது வீட்டில் கண்ட இடங்களில் சவட்டிவைத்தல், சீச்சி வைத்தல், அலங்கோலப்படுத்தி வைப்பது உனக்கு பழகிப்போனால், எந்த நேரமும் ஒவ்வொன்றுக்கும் கத்துவதை கூவுவதை கேட்டுக் கேட்டு சகிக்க முடிந்தால், கோழி கொக்கரிக்கும் சத்தம் கேட்டால் ஜன்னலால் எட்டிப்பார்பது, வெளியே சென்றால் தாமதமாகி கூடு வருவது, இவைகள் எல்லாம் பழகிப்போனால் இப்போது நீ திருமண சட்டதிட்டங்களுக்கு தகுதி பெற்றுவிட்டாய் என்று அர்த்தம்!

👉 இருவரும் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்தால் கட்டாயம் ஒரு குரங்கை தத்தெடுத்து வளர்த்துப் பார்ப்பது நல்லது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *